ஆக்ஷன்


ஆக்ஷன்
x
தினத்தந்தி 7 Sept 2019 9:30 PM IST (Updated: 7 Sept 2019 9:30 PM IST)
t-max-icont-min-icon

விஷால்-சுந்தர் சி. படத்தில் `ராணுவ கமாண்டோ' வேடத்தில், தமன்னா! படம் "ஆக்ஷன்" சினிமா முன்னோட்டம்.

விஷால்-சுந்தர் சி கூட்டணியில், ‘மத கஜ ராஜா,’ ‘ஆம்பள’ ஆகிய 2 படங்கள் உருவாகியுள்ளன. இதில், ‘மத கஜ ராஜா’ படம் திரைக்கு வரவில்லை. ‘ஆம்பள’ படம் நல்ல வசூல் பார்த்தது. இதைத்தொடர்ந்து விஷால்-சுந்தர் சி. இருவரும் மூன்றாவது முறையாக, ‘ஆக்ஷன்’ படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இதுபற்றி சுந்தர் சி. கூறுகிறார்:-

‘‘நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, விஷால் மூலம் நிறைவேறி இருக்கிறது. 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும், சென்னை, ஐதராபாத், டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களிலும் நடத்தி இருக்கிறோம். இதுவரை வேறு எந்த படத்திலும் பார்த்திராத சண்டை காட்சிகள், இந்த படத்தில் இடம் பெறு கின்றன. என் டைரக்ஷனில் வெளிவந்த படங்களில், அதிக சண்டை காட்சிகள் உள்ள படம் இதுதான்.

படத்தில் விஷால் ஜோடியாக ராணுவ கமாண்டோ கதாபாத்திரத்தில், தமன்னா நடித்து இருக்கிறார். இவர்களுடன் இணைந்து குடும்பப்பாங்கான ஒரு கதாபாத்திரத்தில், ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருக்கிறார். அகான்ஸா பூரி, ரவுடித்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் வருவார். ராம்கி, யோகி பாபு ஆகியோரும் இருக்கிறார்கள். அரசியல்வாதியாக பழ கருப்பையா, வில்லனாக இந்தி நடிகர் கபீர்சிங் நடித்துள்ளனர். ட்ரைடென்ட் ரவீந்திரன் தயாரித்து இருக்கிறார்.’’
1 More update

Next Story