கதாநாயகன்-வில்லனாக விஷால்-ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்


கதாநாயகன்-வில்லனாக விஷால்-ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்
x
தினத்தந்தி 20 Feb 2021 10:03 PM IST (Updated: 20 Feb 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

விஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள்.

சில வருட இடைவெளிக்குப்பின் இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். இவர் ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்,’ ‘நோட்டா’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இதில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருக்கிறார்.

படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளன.
1 More update

Next Story