ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம்


ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம்
x
நடிகர்: ஜி.சிவா  டைரக்ஷன்: ஜி.சிவா இசை: மணிசேகரன் செல்வா ஒளிப்பதிவு : ஓகிரெட்டி சிவக்குமார், அருண் சுசில்

நடிகரும் 'விருகம்' என்ற படத்தை இயக்கியவரும், தயாரிப்பாளருமான ஜி.சிவா கதையின் நாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ள படத்துக்கு 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஜி.சிவா ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். ஓகிரெட்டி சிவக்குமார், அருண் சுசில் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். மணிசேகரன் செல்வா இசையமைத்துள்ளார்.

மர்ம கொலை தொடர்பான திரில்லர் படமாக தயாராகிறது. படத்தை சாய்பாபா பிக்சர்சுடன் இணைந்து அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் பால ஞானசுந்தரம் தயாரிக்கிறார். படம் பற்றி டைரக்டர் கூறும்போது, ''அண்மையில் நடந்த குற்ற சம்பவங்களை மையப்படுத்தி சுவாரசியமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரம் நடித்திருந்தாலும் அவரும் எதிரிகளுடன் சண்டை போடும் வித்தியாசமான சண்டை காட்சி இடம் பெற்றிருக்கிறது. பழிக்கு பழி வாங்கும் கதையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி உள்ளது'' என்றார்.

1 More update

Next Story