மலைப்பகுதியில் படமான திரில்லர் கதை


மலைப்பகுதியில் படமான திரில்லர் கதை
x
நடிகர்: சவுந்தரராஜா நடிகை: தேவந்தா  டைரக்ஷன்: அணில் இசை: போலி வர்கீஸ் ஒளிப்பதிவு : எல் ராமச்சந்திரன்

`சாயாவனம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

இதில் கதை நாயகியாக தேவந்தா நடித்துள்ளார். சவுந்தரராஜா, அப்புக்குட்டி, ஜானகி, கர்ணன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்தோஷ் தாமோதரன் தயாரித்து வில்லனாகவும் நடிக்கிறார்.

அணில் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் இளைஞன், மலைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறுகிறான். அங்கு முதல் இரவன்றே கணவன் காணாமல் போகிறான். அவனுக்காக காத்திருக்கும் மனைவிக்கு சில பிரச்சினைகள், கஷ்டங்கள் வருகின்றன. அது என்ன? அதில் இருந்து அவள் தப்பினாளா? என்பது கதை.

திரில்லர் கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. பெரும்பகுதி படப்பிடிப்பு எப்போதும் மழையும் வெள்ளமுமாக இருக்கும் சிரபுஞ்சியில் நடந்துள்ளது. வெள்ள ஆபத்துக்களை படக்குழுவினர் பல நேரங்களில் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது,'' என்றார். ஒளிப்பதிவு: எல் ராமச்சந்திரன், இசை: போலி வர்கீஸ். விஜு ராமச்சந்திரன் திரைக்கதை எழுதி உள்ளார்.

1 More update

Next Story