சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி


சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி
x
நடிகர்: விஜய் ஆண்டனி,பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து நடிகை: பரியா அப்துல்லா  டைரக்ஷன்: சுசீந்திரன் இசை: டி.இமான் 

`பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்துசுசீந்திரன் இயக்கும் `வள்ளி மயில்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரு கிறார். இதில் நாயகியாக பரியா அப்துல்லா நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை தாய் சரவணன் தயாரிக்கிறார்.

படம் பற்றி சுசீந்திரன் கூறும்போது, ``1980-களில் நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான திரில்லர் படமாக `வள்ளி மயில்' உருவாகிறது. 1980 காலகட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அன்றைய காலகட்ட பின்னணியை கண்முன் கொண்டு வரும் வகையில் அதிக பொருட்செலவில் பிரமாண்ட அரங்கு அமைத்து இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது'' என்றார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், கொடைக் கானல், பழனி, மதுரை, சிறுமலை பகுதிகளில் நடந்து வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர். இசை: டி.இமான், ஒளிப்பதிவு: வாஞ்சிநாதன் முருகேசன்.

1 More update

Next Story