ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து


ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Dec 2021 2:26 PM IST (Updated: 12 Dec 2021 2:26 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 71 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் மம்முட்டி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story