கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் நடிகை திரிஷா..!


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் நடிகை திரிஷா..!
x
தினத்தந்தி 12 Jan 2022 3:25 AM GMT (Updated: 12 Jan 2022 3:25 AM GMT)

நடிகை திரிஷா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 7-ந்தேதி நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இதுவரை எந்த ஒரு அறிக்கையிலும் நெகட்டிவ் என்ற வார்த்தையை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அனைவரின் அன்புக்காகவும் வேண்டுதல்களுக்காவும் நன்றிகள். இப்போது நான் 2022-க்காக தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story