அஜித்குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும்...?


அஜித்குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும்...?
x
தினத்தந்தி 2 Feb 2022 11:53 AM IST (Updated: 2 Feb 2022 11:53 AM IST)
t-max-icont-min-icon

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ,திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.இந்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை ரத்து செய்து உள்ளது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story