மொபைல் பாக்ஸ் சுவர் அலங்காரம்


மொபைல் பாக்ஸ் சுவர் அலங்காரம்
x
தினத்தந்தி 14 Feb 2022 11:00 AM IST (Updated: 12 Feb 2022 12:41 PM IST)
t-max-icont-min-icon

மொபைல் போன் வாங்கும்போது கிடைக்கும் அட்டைப் பெட்டியை வைத்து, எளிமையாக, அழகான ‘சுவர் அலங்காரப் பொருள்’ செய்யும் முறையை பார்ப்போமா?

வீணாக தூக்கி எறியும் பொருட்கள் கூட, வீட்டை அலங்கரிப்பதுண்டு. அவ்வாறு, மொபைல் போன் வாங்கும்போது கிடைக்கும் அட்டைப் பெட்டியை வைத்து, எளிமையாக, அழகான ‘சுவர் அலங்காரப் பொருள்’ செய்யும் முறையை தெரிந்துகொள்வோம்.

தேவையானவை:
பழைய மொபைல் பாக்ஸ்
கறுப்பு நிற பெயிண்ட்
டேப்
பாட்டில் மூடி



செய்முறை
1,2,3. தேவையான அளவு பழைய மொபைல் பாக்ஸ்களை எடுத்துக்கொள்ளவும்.  அதன் உள்ளே வெவ்வேறு வடிவங்களில் உள்ள மூடிகளை வைத்து, அதைச் சுற்றி கருப்பு நிற பெயிண்ட்டால் வட்டமாக வரைந்துகொள்ளவும்.

4. வட்டம் வரைந்த பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளுக்கு கருப்பு நிற வண்ணம் பூசவும். இதே போல பாக்ஸின் பக்கவாட்டிலும் செய்யவும்.

5. வண்ணம் உலர்ந்ததும் பாக்ஸின் பின்புறத்தில், இருபுறமும் ஒட்டும் தன்மையுள்ள டேப் கொண்டு, படத்தில் காட்டியவாறு ஒட்டிக்கொள்ளவும்.

இப்பொழுது, பாக்ஸின் உள்ளே அழகான மலர்களை அல்லது அலங்கார பொம்மைகளை  வைத்து சுவற்றை அலங்கரிக்கலாம்.

சார்ஜர் தாங்கி

தேவையானவை
மொபைல் பாக்ஸ்
பேனா
கத்தரிக்கோல்
கத்தி



செய்முறை
1, 2) மொபைல் பாக்சின் மேல்பகுதியில் படத்தில் காட்டிய வண்ணம், ‘சார்ஜர்’ கொண்டு பேனாவால் சார்ஜரின் சுற்றளவை குறித்துக்கொள்ளவும். பின்னர் அந்தப் பகுதியை கத்தியால் வெட்டி நீக்கவும்.

3) பாக்சின் பக்கவாட்டுப் பகுதியில், இருபுறத்திலும் படத்தில் காட்டிய வண்ணம், மொபைல் போனின் தடிமனுக்கேற்ப பேனாவால் குறிக்கவும்.

4) பேனாவால் குறிக்கப்பட்ட பகுதிகளை கத்தரிக்கவும்.

5) பக்கவாட்டில் கத்தரிக்கப்பட்ட பகுதியில் மொபைல் போனைப் பொருத்தி, மேல்புறத்தில் சார்ஜரை பொருத்தி சுலபமாக சார்ஜ் செய்யலாம்.

இப்பொழுது சுலபமான செலவில்லாத ‘சார்ஜர் தாங்கி’ தயார். இந்த முறையில் சார்ஜ் செய்வதன் மூலம் மொபைல் போன் தவறுதலாக கீழே விழுவதைத் தவிர்க்கலாம். 

Next Story