முத்து நகைகள்


முத்து நகைகள்
x
தினத்தந்தி 14 March 2022 11:00 AM IST (Updated: 12 March 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரிக மாற்றத்தால் நவீன உடைகளுக்கு ஏற்ற வகையிலும் முத்து நகைகள் வடிவமைக்கப்படுகின்றன.

ந்திய பாரம்பரியத்தில் முத்து அணிகலன்களுக்கு தனி இடம் உள்ளது. உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்ற அணிகலன்களின் ரகங்களில் முத்தும் ஒன்று. 

மன்னர்கள் காலத்தில் மகத்தான அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் ஊடகமாக முத்து அணிகலன்கள் கருதப்பட்டன. 
வெண்மையான மற்றும் மிகவும் மென்மையான முத்துக்களை கூடுதல் கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். பெரும்பாலும் பாரம்பரிய உடைகளுக்கு என வடிவமைக்கப்பட்டாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரிக மாற்றத்தால் நவீன உடைகளுக்கு ஏற்ற வகையிலும் முத்து நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. 

நெற்றிச்சுட்டி தொடங்கி, ஒட்டியாணம் வரை முத்து அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சில... 



Next Story