அழகிய ‘கடல் சிப்பி பிரேஸ்லெட்’


அழகிய ‘கடல் சிப்பி பிரேஸ்லெட்’
x
தினத்தந்தி 11 April 2022 5:30 AM GMT (Updated: 2022-04-09T15:29:09+05:30)

சிப்பியின் மூலம் தயாரிக்கப்படும் எளிய மற்றும் டிரெண்டியான பிரேஸ்லெட்டை, வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைப் பருவத்தில் கடற்கரைக்குச் செல்லும்போதெல்லாம் மணலில் புதைந்திருக்கும் சிப்பிகளை சேகரித்து விளையாடியது நினைவிருக்கிறதா? கடல் சிப்பிகளைக்கொண்டு தயார் செய்யப்படும் அணிகலன்களுக்கு எல்லா காலத்திலும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் சிப்பியின் மூலம் தயாரிக்கப்படும் எளிய மற்றும் டிரெண்டியான பிரேஸ்லெட்டை, வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:
சிப்பி (புகைப்படத்தில் இருப்பது போல) - 1
மெல்லிய கயிறு - 1
எம்பிராய்டரி நூல் - 1
அலங்கார மணிகள்,
தண்டு வளையம் - 2
கொக்கி வளையம் - 1
கத்தரிக்கோல் இடுக்கி - 1

செய்முறை விளக்கம்:
சிப்பியில் மெல்லிய கயிறை நுழைத்து, இரண்டு எதிர் எதிர் ஓட்டைகளிலும் முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

எம்பிராய்டரி நூலை சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதை முடிச்சு போட்ட கயிற்றில் ஒரு பக்கமாக மடித்து வைத்து, இன்னொரு மெல்லிய கயிறைக்கொண்டு முடிச்சுப் போடவும்.

பின்பு இரண்டு பக்க மெல்லிய கயிற்றிலும் அழகிய மணிகளை ஒவ்வொன்றாய் கோர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு மணிகளைக் கோர்த்த பிறகு, இரண்டு பக்கத்திலும் தண்டு வளையத்தை கத்திரிக்கோல் இடுக்கியை பயன்படுத்தி இணைக்க வேண்டும்.

கடைசியில் அதிகப்படியாக இருக்கும் மெல்லிய  கயிற்றை வெட்டிய பிறகு, கொக்கி வளையத்தை தண்டு வளையத்தில் இணைத்தால் அழகிய ‘கடல்சிப்பி பிரேஸ்லெட்’  தயாராகிவிடும். 

Next Story