நீங்கள் எப்படிப்பட்டவர் என்று கண்டுபிடிக்கும் வழிகள்


நீங்கள் எப்படிப்பட்டவர் என்று கண்டுபிடிக்கும் வழிகள்
x
தினத்தந்தி 11 April 2022 5:30 AM GMT (Updated: 9 April 2022 10:03 AM GMT)

பெரும்பாலும் தனித்த வழியில் விஷயங்களைச் செய்வீர்கள். பணியிடத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மாற்றுக்கருத்து இருந்தால், அதை ஆரோக்கியமான வழியில் எடுத்துச் சொல்வீர்கள்.

ல்லோருக்குமே தான் எத்தகைய ஆளுமையைக் கொண்டவர் என்று அறிந்துகொள்வதற்கு ஆர்வம் இருக்கும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பண்புகளையும், அவற்றிற்கு உரிய குணங்களையும் வைத்து, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

1. நீங்கள் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாதவரா?
உங்கள் மேல் உங்களுக்கே சந்தேகம் இருந்தாலும், தடைகளைத் தாண்டி, வெற்றியைச் சுவைக்க தைரியமாக இருப்பீர்கள். வெற்றி பெறுவதற்கு முன்பே அது எப்படிப்பட்டதாக இருக்கும் என கற்பனை செய்து, அதைக் கைகளில் பிடிக்க முயற்சிப்பீர்கள். எதையாவது வெற்றிகரமாகச் செய்வதைத் தெளிவாகக் கற்பனை செய்வது, நமது புறநிலை செயல்திறன், கவனம் செலுத்துதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த உதவும் என அறிவியல் உறுதிப்படுத்துகிறது.

2. மற்றவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுபவரா?
இரக்கம் மற்றும் பச்சாதாபத்தின் வலுவான உணர்வைக் கொண்டிருக்கிறீர்கள்.  எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் எப்போதும் ஆர்வமாக இருப்பீர்கள்.

3. உங்கள் தவறுகளை நீங்கள் ஒப்புக் கொள்பவரா?
தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்பவர்கள், மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பணிவானவர்களாகவும், தவறுகளைச் சரி செய்யும் அளவுக்கு திறமையானவர்களாகவும் இருப்பார்கள். மேலும், மன்னிப்பு கேட்பது உறவுகளை மேம்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

4. நீங்கள் உறவுகளை மதிப்பவரா?
மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்தவர். ஆரோக்கியமான உறவுகள் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் வளர்க்கும் என்பதையும் அறிந்தவர்.

5. நீங்கள் தலைமை பண்பு கொண்டவரா?
பெரும்பாலும் தனித்த வழியில் விஷயங்களைச் செய்வீர்கள். பணியிடத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மாற்றுக்கருத்து இருந்தால், அதை ஆரோக்கியமான வழியில் எடுத்துச் சொல்வீர்கள்.  தேவைப்படும்போது அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கவும் தயங்கமாட்டீர்கள். அதே சமயம், கட்டளைகளை மதித்து அதைச் சரியாகவும் பின்பற்றுவீர்கள். அதாவது நீங்கள் மாற்றி யோசிப்பது மட்டுமல்லாமல், தவிர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகளையும் காணக்கூடியவர்.

6. நீங்கள் மாற்றத்தை ஏற்பவரா?
நீங்கள் மாற்றத்திற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டவராக இருந்தால், உங்களிடம் அற்புதமான ஆளுமைப் பண்புகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. மாற்றத்தை பின்னடைவாக பார்க்காமல், சுய வளர்ச்சிக்கான வழியாகப் பார்ப்பீர்கள்.

7.  நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவரா?
நீங்கள் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதில்லை. சாதனைகள் மற்றும் இலக்குகளை அடைய செய்ய வேண்டிய விஷயங்களை நன்றாக அறிவீர்கள்.

8. ஆழமாக சிந்தித்து செயல்படுபவரா?
உங்கள் அறிவுக்கூர்மை எல்லா முரண்பாடுகளிலும் உங்களை போராட வைக்கிறது. சிந்தித்து செயல்படுபவர்களால், வாழ்க்கையின் சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை அனுபவிக்கவும் முடியும். 

Next Story