உணவு

அசைவம் சாப்பிடாதவர்கள் போதுமான புரதச்சத்தை பெறுவது எப்படி? + "||" + great source of protein comes from veg or non-veg

அசைவம் சாப்பிடாதவர்கள் போதுமான புரதச்சத்தை பெறுவது எப்படி?

அசைவம் சாப்பிடாதவர்கள் போதுமான புரதச்சத்தை பெறுவது எப்படி?
புரதச்சத்து பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. அசைவ உணவுகளை ஒப்பிடும்போது, சைவ உணவுகளில் புரதம் குறைவாகவே உள்ளது. எனவே சைவ உணவை மட்டும் உண்பவர்கள், தினசரி தங்களுக்குத் தேவையான புரதச்சத்தை பெறுவது குறித்து பார்க்கலாம்.
டல் வளர்ச்சி சீராக இருப்பதற்கு புரதச்சத்து முக்கியமானது. இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், திசுக்களின் வளர்ச்சிக்கும் அவசியமானவை.

ஒவ்வொருவரும் உடல் எடையில், ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தினசரி புரதம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்ணுக்கு, ஒரு நாளுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு இந்த அளவில் மாற்றம் ஏற்படலாம்.

உடலில் புரதச்சத்து குறைவதன் காரணமாக தசைகள் வலுவிழத்தல், முடி உதிர்வு, சரும பாதிப்பு, ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு, வளர்ச்சியின்மை, தசை வீக்கம், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

புரதச்சத்து பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. அசைவ உணவுகளை ஒப்பிடும்போது, சைவ உணவுகளில் புரதம் குறைவாகவே உள்ளது. எனவே சைவ உணவை மட்டும் உண்பவர்கள், தினசரி தங்களுக்குத் தேவையான புரதச்சத்தை பெறுவது குறித்து பார்க்கலாம்.

சைவ உணவுகளில் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. 100 கிராம் அளவில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே துவரை, பச்சைப்பயிறு, உளுந்து, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப்பயறு, பச்சைப்பட்டாணி, சோயா, பாதாம், பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

கீரை வகைகளில் பசலைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

மேலும் புரோக்கோலி, காளான், சோளம், கேழ்வரகு, முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றிலும், பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பன்னீர் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

எளிதாக கிடைக்கும் சுண்டல், வேர்க்கடலை உருண்டை, உடைத்த கடலை உருண்டை, பால், தயிர் போன்றவற்றை பெண்கள் தவறாமல் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. மாதவிடாய் வலியைக் குறைக்கும் சுப்த பத்தகோனாசனம்
வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பத்த கோனாசனம்’ என்றால் ‘கட்டப்பட்ட ஆசன நிலை’ என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை ‘சுப்த பத்தகோனாசனம்’ என அழைக்கிறார்கள்.
2. மாடலிங்கில் கலக்கும் கிராமத்து தேவதை - ஸ்டெபி கிட்டில்
கிராமத்தில் இருந்து வந்ததால், சாராசரி பெண்ணுக்கு இருக்கும் மேக்கப் நுணுக்கங்கள்கூட அப்போது எனக்கு தெரியாது. சரியாக மேக்கப் போடத் தெரியாது. மாடலிங், நடிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றது இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகக் கற்றேன்.
3. ஓரிகாமி நகைகள்
ஓரிகாமி நகைகள் ஜப்பானியர்களின் காகிதக் கலை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
4. நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..
நம் சுயநலத்துக்காகவும், பிற்காலத்தில் கிடைக்கப்போகும் சிறு பலனுக்காகவும் நிகழ்கால வாழ்வை மறந்து விடுகிறோம். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, எதையோ நோக்கி, ஒரு நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
5. பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி
ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.