சிக்கன் மலாய்
சுவையான சிக்கன் மலாய் பற்றி தெரிந்து கொள்வோமா, வீட்டில் செய்து பார்ப்போமா...?
இந்தியாவைத் தாயகமாக கொண்டது ‘மலாய்’ உணவுகள். உணவுப் பொருட்களுடன் பால் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் ‘சிக்கன் மலாய்’ சுவை மிகுந்தது. அதன் செய்முறை விளக்கம் உங்களுக்காக...
தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம் (எலும்பு நீக்கியது)
தயிர் - 5 தேக்கரண்டி
கறி மசாலாப் பொடி - 2 தேக்கரண்டி
பூண்டு பெரியது - 2
இஞ்சித் துண்டு - 1
வெங்காயம் - 4
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பிரெஷ் கிரீம் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
பின்பு அதில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும், அது உருகியதும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அதனுடன் வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் சுத்தப்படுத்திய கோழி இறைச்சியை அதில் சேர்க்கவும். இறைச்சி சற்று வதங்கியதும் தயிர், மிளகுப் பொடி, சீரகப்பொடி, கறி மசாலாப்பொடி, தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு வாணலியை 10 நிமிடங்கள் மூடி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
பின்னர் அதில் பிரெஷ் கிரீம், பச்சை மிளகாய் மற்றும் வெண்ணெய் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.
இப்பொழுது வித்தியாசமான சுவையில் ‘சிக்கன் மலாய்’ தயார்.
Related Tags :
Next Story