ஆரோக்கியம் அழகு

அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்! + "||" + light weight makeup: new makeup trend

அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!

அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். வெளியே செல்லும்போதும், விசேஷ நாட்களிலும் இயல்பான அழகை ஒப்பனை மூலம் மேலும் ‘பளிச்’ என்று மாற்றிக் கொள்வதில் பல பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். 

ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம். லைட்-வெயிட் மேக்கப்பை பகல், இரவு என எந்த நேரத்திலும் போட்டுக் கொள்ளலாம். 

பவுண்டேஷன்:
அதிக அடர்த்தி இல்லாத, மென்மையான பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். சருமத்தின் நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷனைப் பயன்படுத்தும்போது, மேக்கப் இயற்கையானதாக இருக்கும்.

தரத்துக்கு முக்கியத்துவம்:
அழகு சாதனப் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக முகப்பொலிவு குறையும். எனவே, தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.

பயன்படுத்தும் முறை:
பவுடர், கிரீம், லிக்விட் என பல வகைகளில் அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நமது சருமத்துக்கு ஏற்ற விதத்தில் உபயோகப்
படுத்துவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மாய்சுரைசர்: 
மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை நன்றாகத் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஈரமான துணியைக் கொண்டு, முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு, மாய்சுரைசர் பூச வேண்டும். இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். 

முக்கியமான பகுதிகள்: 
கண்களுக்குக் கீழிருக்கும் கருவளையம், சுருக்கங்கள், கருந்திட்டுக்கள் போன்ற அனைத்தையும் மறைக்கும் வகையில் மேக்கப் போட வேண்டும். 

கன்னம், கண்கள்: 
கன்னத்திற்கு மேக்கப் போடும்போது, அதிக இறகுகள் கொண்ட பிரஷ்ஷை பயன்படுத்துவது நல்லது. இதில் குறைந்த அளவில் பவுடரைத் தொட்டு, கன்ன எலும்புகளில் மேல்வாக்கில் தடவ வேண்டும். இதன் மூலம் கன்னங்களை அழகுபடுத்தலாம். 

மேலும் எடுப்பாகக் காட்ட வேண்டுமானால், தங்கம் மற்றும் வெள்ளி நிற பவுடரை லேசாகத் தடவலாம். முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.

உதடுகள்: 
வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் உதடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதற்கு லிப்பாம் அல்லது கண்டிஷனர் பூச வேண்டும். பின்பு பிங்க், பிரவுன் போன்ற நிறங்கள் கொண்ட உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்தலாம். 


தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
3. உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
4. அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’
உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்
5. இமயம் முதல் குமரி வரை பிரபலமான ‘ஜிலேபி’
மற்ற மாநிலங்களில் ஜிலேபியை முஷபாக், ஜிலிபி, ஜிலாபி உட்பட பல பெயர்களில் அழைக்கிறார்கள். மைதா, தயிர், சர்க்கரைப் பாகுதான் இதற்கு அடிப்படையாக தேவைப்படும் பொருட்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாறுதல்களுடன் சுவை கூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது ஜிலேபி.