வாழ்க்கை முறை

மழைக்கால பயணங்களில் கவனிக்க வேண்டியவை! + "||" + monsoon road trips and safety awarness

மழைக்கால பயணங்களில் கவனிக்க வேண்டியவை!

மழைக்கால பயணங்களில் கவனிக்க வேண்டியவை!
மழைக்காலங்களில் வாகனத்தின் பிரேக்கை அழுத்தும் பொழுது, உடனடியாக ஒரே நேரத்தில் இரு பிரேக்குகளையும் அழுத்தாமல், மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக அழுத்த வேண்டும்.
பெண்கள் தங்களின் தேவை மற்றும் அலுவல்கள் காரணமாக வெளியே செல்வது தவிர்க்க முடியாதது. அவ்வாறு செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். 

குறிப்பாக மழைக்காலங்களில் மழை நீர் தேக்கம், சாலைகளின் மேடு பள்ளங்கள், பாதாள சாக்கடை திறப்புகள், மின்கம்பங்கள் போன்றவை சாலை பயணங்களை கேள்விக் குறியாகவும், சில நேரங்களில் ஆபத்தானதாகவும் மாற்றுகின்றன. 

மழைக் காலம் தொடங்கும் பொழுது, இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் வாகனத்தின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்குகிறதா என சரி பார்த்துக் கொள்வது சிறந்தது.

முக்கியமாக வண்டியின் பிரேக், டயர் ஆகியவை சரியான நிலையில் இருக்கிறதா என கவனிக்க வேண்டும். இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.

மேலும் வாகனத்தில் ஹெட் லைட் மற்றும் இண்டிகேட்டர் போன்றவை சரியாக இயங்குகிறதா என சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. 

மழைக்காலங்களில் வாகனத்தின் பிரேக்கை அழுத்தும் பொழுது, உடனடியாக ஒரே நேரத்தில் இரு பிரேக்குகளையும் அழுத்தாமல், மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக அழுத்த வேண்டும்.

தினமும் வெளியே செல்வதற்கு முன் போதுமான அளவு பெட்ரோல் இருக்கிறதா? என சரி பார்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கலாம்.

மழைக் காலங்களில் அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்து மெதுவாக செல்வது நல்லது. மேலும் சாலையில் செல்லும்போது  நிதானமாக பயணிக்க வேண்டும்.

எதிரில் வேகமாக வரும் வாகனம் மற்றும் அதிக சப்தம் ஏற்படுத்தும் ஹாரன் ஒலி பெண்களுக்கு எளிதில் பதற்றத்தை உருவாக்கக் கூடும்.

இரு சக்கர வாகனம் உபயோகிப்பவர்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெட்போன் உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் மழைக்காலங்களில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் கவனம் வைத்து செல்ல வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், பின்னால் வரும் வாகனங்களின் சத்தம் கேட்குமாறு ஒலி பெருக்கிகளை குறைவான சத்தத்தில் வைத்துக் கொள்வது சிறந்தது.

தனியாகச் செல்லும் பொழுது தெரியாத நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆட்கள் வழி மறித்தால் நிறுத்தாமல் செல்வது பாதுகாப்பானது. பெரிய வாகனங்களின் பின்னால் செல்லும்போது குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்ல வேண்டும்.

இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் குடைகளை உபயோகிக்காமல் ‘ரெயின் கோட்’ அணிந்து செல்லலாம். விளம்பர பதாகைகளின் அருகில் செல்லாமல் விலகிச் செல்வது சிறந்தது.

மழைக்காலங்களில் வளைவுகளில் திரும்பும் பொழுதும், வண்டியை நிறுத்தும் பொழுதும் இண்டிகேட்டர் ஒலி மற்றும் ஒளி சமிக்ஞை செய்வது அவசியமானதாகும். 

மற்ற காலங்களை விட மழைக் காலங்களில் சாலையில் செல்லும்போது அதிக கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5. அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’
உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்