பாரம்பரியமாக வாசல் தெளிக்கும் முறை பின்பற்றப்படுவது ஏன்?
சாணம் கரைத்து வாசல் தெளிப்பது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. வாசல் தெளிப்பது, குனிந்து கோலம் போடுவது போன்றவை சிறந்த யோகா ஆசனமாகவும் அமையும்.
வாசல் தெளித்து கோலம் போடுவது அன்றாட வழக்கம் என்பதில் இருந்து மாறி, விசேஷ காலங்களுக்கான அலங்கார செயல்பாடாகத் திகழ்கிறது. குறிப்பாக நகர வாழ்க்கைச் சூழலில் இந்த நடைமுறை மாறிப்போய் உள்ளது. அதேசமயம் கிராமங்களில் வாசல் தெளிப்பதும், கோலமிடுவதும் பாரம்பரியமாக தினமும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு பாரம்பரியமாக வாசல் தெளிக்கும் முறையை பின்பற்றுவதன் அவசியம் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அதிகாலையில் கண் விழித்தல்
இரவில் சீக்கிரமாக தூங்கி, அதிகாலையில் எழுந்து நாளை தொடங்குபவர்களுக்கு அந்த நாள் நீண்டதாக இருக்கும். அனைத்து செயல்களையும் பதற்றமின்றி சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாளை தக்க வைத்து கொள்வதற்கான எளிமையான பயிற்சியாக, அதிகாலை கண் விழித்ததும் வீட்டை சுத்தப்படுத்துதலைத் தொடங்கலாம். இது உடலுக்கு நல்லதொரு பயிற்சிக்கான ஆரம்பமாக இருக்கும்.
அதிகாலையில் எழுந்து செயல்படும்போது வாகனப் புகை, சுற்றுச்சூழல் மாசு என எதுவும் இல்லாத தூய ஆக்சிஜன் உடலுக்கு கிடைக்கும்.
மேலும், சாணம் கரைத்து வாசல் தெளிப்பது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. வாசல் தெளிப்பது, குனிந்து கோலம் போடுவது போன்றவை சிறந்த யோகா ஆசனமாகவும் அமையும். ஆண்-பெண் இருபாலரும் இதைச் செய்யலாம்.
கோலம் போடுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள்:
கோலம் போடுவது மனதை ஒருமுகப்படுத்தச் செய்வதோடு, சிந்தனையை தெளிவுப்படுத்தவும் உதவும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
மேலும் புள்ளி வைத்து கோலம் போடுவதும், சிக்கலான கோலங்கள் போடுவதற்கு பழகி பயிற்சி எடுப்பதும், வாழ்வில் பல சிக்கலான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு உதவும். எனவே, பாரம்பரிய வழக்கமான வாசல் தெளிக்கும் முறையை அனைவரும் பின்பற்றுவது சிறந்தது.
Related Tags :
Next Story