உங்களுக்காக சில கேள்விகள்
துணையின் அன்பை புரிந்து கொள்வதற்கு வித்திடும் கேள்வி பதில் பற்றிய தொகுப்பு இது.
கணவன்-மனைவி உறவில் அன்பும், ஆதரவும் முக்கியமானவை. உங்கள் துணையின் அன்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு, இந்த கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.
கேள்வி 1:
நாள் முழுவதும் உங்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம். இது தெரியாமல் உங்கள் கணவர், நீங்கள் இருவரும் திரைப்படத்துக்கு சென்று விட்டு, இரவு உணவையும் வெளியில் சாப்பிடலாம் என்று டிக்கெட் ஏற்பாடு செய்து இருக்கிறார். நீங்கள் மிகவும் சோர்வாக வந்திருப்பதை பார்த்தவுடன் அவர் என்ன செய்வார்?
1. என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு, திரைப்படத்துக்கான டிக்கெட்டை ரத்து செய்வார். ஓட்டலில் இருந்து உணவு ஆர்டர் செய்வார். உங்கள் மனதை இதமாக்கும் வகையில், உங்களோடு பேசிக்கொண்டிருப்பார்.
2. அலுவலகத்தில் நடந்தது பற்றி விசாரித்துவிட்டு, உங்களை ஓய்வு எடுக்கச் சொல்வார். உங்களுக்கான தனிமை நேரத்தை தருவார்.
3. திரைப்படம் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருப்பதாக உங்களிடம் சொல்வார்.
4. திரைப்படத்துக்கு செல்வதை ரத்து செய்துவிட்டு, உங்களுக்கு பிடித்த உணவு விடுதிக்கு அழைத்துச் செல்வார். உங்களை மகிழ்ச்சியாக்குவதற்கு முயற்சிப்பார்.
கேள்வி 2:
உங்களுக்கு பொருத்தமில்லாத ஆடையை அணிந்துகொண்டு, அவரிடம் ‘‘இந்த ஆடை எப்படி இருக்கிறது?’ என்று கேட்டால் என்ன சொல்வார்?
1. நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பீர்கள் என்பார்.
2. ஏதோ ஒரு காரணத்துக்குத்தான் நீங்கள் இந்த ஆடையை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்பார்.
3. உங்கள் அழகுக்கு முன்னால் இந்த ஆடையின் அழகு குறைவாக இருக்கிறது என்பார்.
4. நன்றாக இல்லை என்பார்.
கேள்வி 3:
இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு வரும்போது, உங்கள் கருத்து சரியானது என்றால், அவர் என்ன செய்வார்?
1. வருத்தம் தெரிவிப்பார். எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினை வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று விவாதிப்பார்.
2. உங்கள் கருத்து சரியானது என்று ஏற்றுக்கொள்ளாமல், மன்னிப்பு மட்டும் கேட்பார்.
3. முதலில் மன்னிப்பு கேட்பார். பின்பு அவர் கருத்தில் உள்ள சரியானவைகளைப் பற்றி விளக்குவார்.
4. மன்னிப்பு கேட்டுவிட்டு உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்கு முயற்சிப்பார்.
கேள்விகளுக்கான விடைகளில் எந்த எண்ணை அதிகமாக தேர்வு செய்திருக்கிறீர்கள்?
எண் 1: உங்கள் கணவர் உங்களை நன்றாக புரிந்துகொள்பவர். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அவர் தடுமாறினாலும், நீங்கள் விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லுங்கள்.
எண் 2: உங்கள் கணவர் உங்களது உணர்வுகளுக்கு மரியாதை தருபவர். கணவன்-மனைவி உறவுக்குள் இது முக்கியமானது.
எண் 3: உங்கள் கணவர் எதிலும் நேர்மையாக நடந்துகொள்ள முயற்சிப்பவர். உங்களை மகிழ்விப்பதற்காக உண்மைக்கு மாறாக பேச மாட்டார். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
எண் 4: உங்கள் கணவர் உங்களது முகத்தில் சிரிப்பை வரவழைப்பவர். கடினமான சூழ்நிலையிலும் உங்களை மகிழ்ச்சியோடு இருக்கச் செய்பவர்.
Related Tags :
Next Story