குழந்தைகளுக்கு மொட்டை போடுவது ஏன்?
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் ரீதியான நன்மை தரும் காரணம் இருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டே பாரம்பரியமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டன. அதில் ஒன்று தான் மொட்டை அடிப்பது. அதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்கவில்லை என்றால் ‘சாமி குத்தம்' ஆகிவிடும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. பெரும்பாலானோர் இதை குலதெய்வத்திற்காகச் செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும், குடும்ப வழக்கம் என்றும் நினைத்து செய்கிறார்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் மொட்டை அடிப்பதை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் குழந்தையின் தாய்மாமன் அல்லது தாயின் தந்தையின் மடியில் வைத்து மொட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் இதோ...
தாயின் கருப்பையில் உள்ள பனிக்குடத்தில் ஒன்பது மாதங்கள் குழந்தை வளரும். அந்த நீர் ரத்தம், மலம், சலம் மற்றும் தண்ணீரால் நிறைந்தது.
அந்த நீரில் ஊறிப்போய் இருக்கும் குழந்தையை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் தலையில் உள்ள கழிவுகள் அப்படியே தான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்துத்தான் போக்க முடியும்.
மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர்க்கால்களின் ஊடாக தலையிலிருந்து எளிதில் வெளியேறிவிடும். இதன் மூலம் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வருவது குறையும். ஒற்றைத் தலைவலி மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தையின் உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உடலுக்கு ‘வைட்டமின் டி’ சத்து எளிதில் கிடைக்கும். இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும். பிறந்த குழந்தையின் முடி அடர்த்தி இல்லாமல் மெலிதாக இருக்கும். மொட்டை அடித்த பின்பு சீராக வளர ஆரம்பிக்கும்.
சிலர் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பார்கள். சிலர் குழந்தைகளுக்கு முடி வளர வளர மூன்று முறை மொட்டை அடிப்பார்கள். முதலில் சில கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அடுத்தடுத்து அடிக்கும் மொட்டைகளில் கழிவுகள் வெளியேறிவிடும் என்பதுதான் அதற்கான காரணம்.
Related Tags :
Next Story