பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன?


பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன?
x
தினத்தந்தி 11 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக மட்டுமின்றி, ஒரே சமயத்தில் இரண்டு மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் குணம், பல நேரங்களில் அவர்களின் உண்மையான குணம் அல்ல.

திகாலம் முதல் தற்போதைய தொழில்நுட்ப காலம் வரை, பெண்களைப் பற்றியும், அவர்கள் எந்த நேரத்தில், என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், யூகிப்பது பெரும் புதிராகவே உள்ளது. அது குறித்த சுவாரசியமான சில காரணங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

பெண்கள் பெரும்பாலான நேரங்களில் பல உணர்ச்சிகள் கலந்த கலவையாகவே திகழ்வார்கள்.உதாரணமாக, நன்றாக சிரித்துக் கொண்டிருக்கும் பெண்கள், அடுத்த விநாடியிலேயே அழவும் செய்வார்கள். இதற்கான காரணம், தங்களது உணர்ச்சி மற்றும் உணர்வுகளை அதிகப்படியாக வெளிப்படுத்துவதே ஆகும்.

பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக மட்டுமின்றி, ஒரே சமயத்தில் இரண்டு மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் குணம், பல நேரங்களில் அவர்களின் உண்மையான குணம் அல்ல. ஆனால் பெண்களால் அந்த ரகசிய குணத்தையோ அல்லது ரகசியமான விஷயத்தையோ நீண்ட காலம் மறைத்து வைக்க முடியாது என ஆய்வுகள் கூறுகின்றன.

உதாரணமாக, மற்றவர்கள் தங்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பல பெண்கள் நினைப்பார்கள். ஆனால் தாங்கள் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். இதன் முக்கிய காரணம், பெண்கள் தங்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறையான மற்றும் தங்களிடம் அன்பு செலுத்தும் நபர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புவது தான்.

அதன் காரணமாகவே, மற்றவரிடம் காணும் குறைகளைக்கூட நேரடியாக கூறாமல் புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்கள். மற்றவர்களை மனதளவில் காயப்படுத்தக் கூடாது என்பதும், அந்த உறவை இழக்கக் கூடாது என்பதுமே இதற்கான காரணம்.

ஆனால் இதுவே பின்னாளில் அவர்களுக்கு பிரச்சினையாக அமையக் கூடும். ஏனென்றால், ஆரம்பத்தில் மற்றவர் செய்யும் செயல்களை அவ்வாறு கடந்து சென்றவர்களால், அதே தவறு மீண்டும் மீண்டும் நடக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நபரை வெறுக்க ஆரம்பிப்பார்கள். இதனை செயல் வடிவங்களிலும் பெண்கள் காட்டத் தொடங்குவார்கள். மேலும் அதற்கான காரணத்தையும் முழுமையாக வெளிப்படுத்த மாட்டார்கள். காரணம், தான் இப்பொழுது வெறுக்கும் குறிப்பிட்ட செயல் முன்னொரு நாளில் அந்த உறவை இழக்க வேண்டாம் என்பதற்காக மிகவும் பிடித்த செயலாக அவர்களிடம் பதிவு செய்திருப்பார்கள். 

இதுவே சம்பந்தபட்ட நபரை குழப்பமடைய வைக்கும். என்ன காரணம் என்பதை அறியாமல் அவர்களின் மனமும் தடுமாறும். ஒரு வேளை மற்றவர்கள் அந்த குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடித்தால், அதுவே அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அந்தக் காரணத்தை கண்டுபிடிக்க இயலாதவர்களுக்கோ பெண்கள் எப்பொழுதும் புரியாத புதிராகவே தெரிவார்கள். 

Next Story