ஆளுமை வளர்ச்சி

தயக்கம் தவிர்க்கும் வழிகள் என்ன? + "||" + Hesitation...? Don't hestitate to solve it..!

தயக்கம் தவிர்க்கும் வழிகள் என்ன?

தயக்கம் தவிர்க்கும் வழிகள் என்ன?
உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். சிலர் தான் செய்ய நினைத்ததை முழு மனதோடு முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். சிலரோ தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமல் வெற்றியைத் தவற விடுவார்கள். இவ்வாறு வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் தயக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகள் இதோ..

* ஏன் வருகிறது தயக்கம்?

‘மற்றவர்களை போல நாம் இல்லை’ என தோற்றத்தையும், திறமையையும் வைத்து பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யார் முன்னிலையிலோ, சங்கடப்படுத்தும் பேச்சோ, கேலிகளுக்கோ உள்ளாகி இருந்தால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 

இவ்வாறான தருணங்கள் உண்டாக்கும் தயக்கம் பயமாக மாறிவிடலாம். எந்தச் சூழல் அல்லது எந்த விஷயம் உங்களுக்கு தயக்கத்தை, பயத்தை தருகிறதோ அதில் இருந்து விலகிப் போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு, வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.


உதாரணமாக, உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.

பலருக்கு தங்களது வசிப்பிடத்திலோ, வேலை செய்யும் சூழலிலோ இது போன்ற தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் இருந்தால், அந்த இடத்தை விட்டு விலகுவதோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதோ நல்லது. 

மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கை கூடவில்லை என்றால் தயங்காமல் மருத்துவர்களையோ அல்லது இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கொடுக்கும் நபரையோ சந்தித்து உரையாடுங்கள். இது தயக்கம் தகர்க்கும் வழியாக உங்களுக்கு அமையும். 

தொடர்புடைய செய்திகள்

1. பி.டி. உஷா போல ஆக வேண்டும் - ரித்திகா
10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தனது எட்டரை வயதில் பங்கேற்ற ரித்திகா, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தையும், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
2. கிராம மக்களை மகிழ்ச்சிப்படுத்திய மாணவி ஜெயலட்சுமி
கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு முன்பு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம். போகும் வழியில் மதுக்கடைகள், மெயின் ரோடு எல்லாவற்றையும் கடந்து தான் செல்ல வேண்டும். இதன் மூலம் நிறைய சிரமப்பட்டிருக்கிறோம்.
3. கார்போஹைட்ரேட்டுகள் எடையை அதிகரிக்குமா?
எளிமையான கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சிக்கலான கார்போஹைட்ரேட்டை உடல் கிரகித்துக்கொள்ள நீண்ட நேரம் ஆகும்.
4. வாழ்வதே ஜெயிப்பது போலத்தான்!
படிப்பில் தடுமாறிய ஜோதிக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இசை அவரது மனதில் அமைதியைக் கொண்டு வந்தது. பிடித்த பாடல்கள் இசைக்கப்படும்போது இணைந்து பாட ஆரம்பித்தார். குடும்பத்தினர் ஜோதியின் இசை ஆர்வத்தை அறிந்து 13 வயதில் இசைப்பயிற்சியைத் தொடங்கினர்.
5. தும்மல் குறித்த சுவாரசியமான தகவல்கள்
ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஒரு வினாடி இதயத் துடிப்பு நின்று, பின் அதிகமாகத் துடிக்கும். தும்மலை அடக்கும்போது முதுகு வலி, சுளுக்கு, சில சமயங்களில் எலும்பு முறிவுகூட உண்டாகலாம்.