சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் | தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் | நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்- திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் | அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன - மா.சுப்பிரமணியன் | அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் - மா.சுப்பிரமணியன் | கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் - கல்லூரி முதல்வர் கலைச்செல்வி |

ஆளுமை வளர்ச்சி

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை! + "||" + overthinking...?

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!
கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப் பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களின் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
பெண்கள் ஒரே நேரத்தில் பலவற்றைப் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் இந்த சிந்தனையே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இதன் காரணமாக, பெண்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இது குறித்து உளவியல் ரீதியாக தெரிந்துகொள்ளலாம்.

கவலை என்பது மன அழுத்தத்தின் முதல் படி. அதைக் கட்டுப்படுத்துவது அனைவருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்போது, எதிர்மறையான பல சிக்கல்களை உருவாக்குகிறது. அடிக்கடி கவலைப்படும் பிரச்சினை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப் பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களின் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை பெண்களிடையே கவலையையும், மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன.

இதைத் தவிர அதீத சிந்தனை என்பது சில குடும்பங்களில் மரபியல் வழியாகவும் ஏற்படக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமையை அனுபவிப்பது போன்ற செயல்களால் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.

கவலையைத் தொடர்ந்து மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகளின் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் தேவையில்லாத கவலை இருந்தால், அதை ஆரம்பத்திலேயே சரி செய்வதற்கான வழிகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

மனநல பிரச்சினைக்கு ஆலோசனை கேட்கும்போது மனச் சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல் நலப் பிரச்சினைகளைத் தெளிவாக கூறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுவது நல்லது. இது கவலை, அதிக சிந்தனை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும்.


தொடர்புடைய செய்திகள்

1. விதவிதமான தலையணைகள்!
சந்தையில் இருக்கும் விதவிதமான தலையணைகளை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளோம்.
2. வெஜ் கீமா
எளிய முறையில் வெஜ் கீமா செய்வது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்....
3. இனிமையான தூக்கத்திற்கு... எளிமையான வழிகள்...
ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு தியானம் செய்வது எளிய வழியாகும். இரவில் படுக்கும் முன்பு தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
4. உங்கள் தோட்டத்துக்கு பறவைகளை வரவழைப்பது எப்படி?
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகை பறவைகளுக்கு அரிசி மற்றும் நாம் உண்ணும் உணவுகளை வைக்காமல் அவற்றிற்கு உண்ண ஏதுவான சிறுதானியங்களை வைக்க வேண்டும்.
5. வளைகாப்பு விழா நடத்துவது ஏன்?
உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து ‘உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.