ஆளுமை வளர்ச்சி

நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? + "||" + Face the interview Fear

நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?

நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
நேர்காணல் குறித்த அச்சமும், கவலையும் திறமையை வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும். எனவே பயமின்றி இயல்பாக நடப்பது, நாம் தெளிவானவர் என்பதைப் புரியவைக்கும்.
ங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக முயற்சிக்கும் பெண்கள் பலருக்கும் ‘நேர்காணல்’ என்றாலே ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு.

நேர்காணலுக்கான தயாரிப்புகளாக தகுந்த  உடை அணிவது, நேர்காணலுக்கு செல்லும் நிறுவனம் மற்றும் வேலையைப் பற்றிய விவரங்களை அறிந்திருத்தல் போன்றவை அடிப்படையானவை மட்டுமே.  இவற்றைத் தாண்டி நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பது பற்றிய சில வழிமுறைகள்:

தாக்கம்:
முதல் சந்திப்பிலேயே, நம்மைப் பற்றிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது நல்லது. நேர்காணலின்போது நம்முடைய தனித்தன்மை மற்றும் ஆளுமைத்திறனை மதிப்பிடுவார்கள். ‘ஆளுமை’ என்பது தனிப்பட்ட நடத்தை, அணுகுமுறை, பிறரிடம் பேசும் விதம் போன்றவற்றைச் சார்ந்தது. எனவே ஆளுமையை மேம்படுத்தும்போது  நேர்காணல் செய்பவருக்கு நம் மீதான  நம்பிக்கை அதிகரிக்கும்.

நேர்காணல் என்றாலே பொதுவான சில கேள்விகள் இருக்கும். நம்மைப் பற்றிய அறிமுகம், வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இதற்கு முன்னால்  பணி செய்த  நிறுவனத்தில் இருந்து விலகியதற்கான காரணம் போன்ற கேள்விகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி பதிலளிக்கும்போது நம்முடைய தன்னம்பிக்கையை அறிந்து கொள்வார்கள்.

ஆர்வம்:
பல நிறுவனங்கள் பணியாளர்களிடம் புதியவற்றை தெரிந்துகொள்வது மீதான ஆர்வம், குழுவோடு இணைந்து செயல்படும் முனைப்பு, நம்பகத்தன்மை போன்றவற்றை எதிர்பார்க்கின்றன. அவற்றுக்கு ஏற்றது போல நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நேரம் தவறாமை:
நேர்காணலுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகச் செல்லும் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். கால தாமதம் ஏற்படும்போது, தேவையற்ற பதற்றம் உண் டாகும். இது நேர்காணலின்போதும் எதி ரொலிக்கும்.

உண்மை, நேர்மை:
சுயவிவரப் பட்டியலில் நாம் அளித்துள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கேள்விகளும் அமையும். எனவே நேர்மையாகவும், தைரியத்தோடும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்.

நம்முடைய திறமைகள், கல்வி அறிவு ஆகியவை நமது பேச்சிலும் எதிரொலிக்க வேண்டும். இது நம்மைத் தேர்வு செய்வதற்கு உதவும்.

தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளைத்  தெளிவாகப் புரிந்துகொண்டு, சிறந்த பதிலை அளிக்க வேண்டு்ம். தடுமாற்றத்தோடு பதில் அளிக்கும் பொழுது நமது திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போகும்.

நேர்காணல் குறித்த அச்சமும், கவலையும் திறமையை  வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும். எனவே பயமின்றி இயல்பாக நடப்பது, நாம் தெளிவானவர் என்பதைப் புரியவைக்கும்.

குழு நேர்காணல்:
இத்தகைய நேர்காணலில், கேள்விக்கு பதில் அளிக்கும்போதும், விவாதத்தில் கலந்துகொள்ளும் போதும், முதலில் பேசுவது முக்கியமானது. சரியான பதில்களை, சரியான விதத்தில் முன் வைப்பதும்அவசியமானது.

ஊதியம் பற்றிய கேள்விகளுக்கு, நாம் வேலை தேடும்  துறையில் உள்ள ஊதிய விகிதங்களுக்கு ஏற்றபடி பதில் தருவது நல்லது.

முறையான தயாரிப்பு, அச்சமற்ற தன்னம்பிக்கை, ஊக்கமான செயல்பாடு இவையே நேர்காணலில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிகள் ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.