நடிகர் விஜய் ’பீஸ்ட்’ பட முதல் நாள் வசூல் விவரம்...!
பீஸ்ட் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.
சென்னை
நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் நேற்று காலை திரையரங்குகளில் வெளியானது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் ஆராவார்ம் செய்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை மட்டுமே சுமார் ரூ. 1.96 கோடி வரை முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பீஸ்ட் திரைப்படம்.
இதன்முலம், இதற்குமுன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.
மேலும், மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிசில், தான் கிங் என்று நிரூபித்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு கேரளாவில் மவுசு அதிகரித்துள்ளது. கேரளாவில் ஏராளமான தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியான நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் இளம்பெண்கள், தாய்மார்கள் என பெண்கள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் பீஸ்ட் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து சென்றனர்.
இதில் குறிப்பாக ரசிகைகள் சிலர் தியேட்டர் முன்பு குத்தாட்டம் போட்டு பீஸ்ட் படத்தை கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 6 கோடி வந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மோகன்லால், மம்முட்டி படங்களின் அளவிற்கு விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு கேரளாவில் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் அமெரிக்காவில் வெளியாகி 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
Related Tags :
Next Story