ஐ.பி.எல் கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றிபெற்றது. #IPL2019 #KKRvsRCB
கொல்கத்தா,
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 35-வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் பார்தீவ் பட்டேல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். அதில் பார்தீவ் பட்டேல் 11 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அக்ஷ்தீப் நாத் 13 ரன்களில் வெளியேறினார்.
அடுத்ததாக 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அதில் விராட் கோலி 40 பந்தில் அரைசதம் பதிவு செய்தார். அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய விராட் கோலி 57 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 100 (58) ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 17 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல், குல்தீப் யாதவ், ஹாரி கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் கிரிஸ் லைன், சுனில் நரைன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் கிரிஸ் லைன் 1(2) ரன்னும், சுனில் நரைன் 18(16) ரன்களும், சுப்மன் கில் 9(11) ரன்களும், ராபின் உத்தப்பா 9(20) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்ததாக நிதிஷ் ராணா, ஆண்ரூ ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 33 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டிய ரசலும் தனது அரைசத்தினை பதிவு செய்த நிலையில் 65(25) ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் நிதிஷ் ராணா 85(46) ரன்களும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக டேல் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளும், சைனி, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றிபெற்றது.

Related Tags :
Next Story