இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய பெங்களூரு ஆடுகளம் சிறந்ததாக இல்லை : ஐசிசி


இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய பெங்களூரு ஆடுகளம் சிறந்ததாக இல்லை : ஐசிசி
x
தினத்தந்தி 20 March 2022 1:00 PM GMT (Updated: 20 March 2022 1:00 PM GMT)

இரு அணிகளும் விளையாடிய பெங்களூரு ஆடுகளத்தை சராசரிக்கும் குறைவாக ஐசிசி மதிப்பிட்டுள்ளது


இந்தியா - இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் கடந்த மார்ச் 12ம் தொடங்கி 3 நாட்கள்  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி 3 நாளில் முடிவடைந்துவிட்டது .

இந்த போட்டியில் இரு அணிகளும் விளையாடிய பெங்களூரு ஆடுகளத்தை சராசரிக்கும் குறைவாக ஐசிசி மதிப்பிட்டுள்ளது 

இந்த போட்டியின்   நடுவர்  ஜவகல் ஸ்ரீநாத் கூறுகையில் ;

முதல் நாளிலேயே ஆடுகளம் நிறைய திருப்பங்களை அளித்தது, என் பார்வையில், இது பேட் மற்றும் பந்திற்கு இடையேயான போட்டி அல்ல" என்று   கூறியுள்ளார் .இதனால் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய பெங்களூரு ஆடுகளத்தை சராசரிக்கும் குறைவாக ஐசிசி மதிப்பிட்டுள்ளது 


Next Story