ஐபிஎல்: குஜராத்திற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ


ஐபிஎல்: குஜராத்திற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ
x
தினத்தந்தி 28 March 2022 4:04 PM GMT (Updated: 28 March 2022 4:04 PM GMT)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோஅணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.

கே.எல்.ராகுல் சந்தித்த முதல்  பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். டி காக் 7 ரன்னில் அவுட்டானார். எவின் லிவிஸ்(10) மனிஷ் பாண்டே(7) அடுத்ததுத்து அவுட்டானதால், தொடக்கத்திலேயே லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதையடுத்து தீபக் ஹூடாவும் (55) ஆயுஷ் படோனியும் (54) அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.


Next Story