எனது ஓய்வு முடிவு குறித்து நான் தான் முடிவுசெய்வேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து விளையாட விருப்பமில்லை என்றால், எனது ஓய்வு முடிவை நானே அறிவிப்பேன் என்று ரொனால்டோ கூறியுள்ளார்.
போர்ச்சுக்கல்,
உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்து பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், 2022 பிபா உலகக்கோப்பையின் தகுதிச்சுற்றில் பிளே ஆப் இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி மாசிடோனியாவை இன்று எதிர்கொள்கிறது. அப்போது ரொனால்டோவிடம் ஓய்வு குறித்து கேள்வியெழுப்பியபோது அவர் கூறுகையில்;
"என்னிடமும் இதே கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். என் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது நான்தான். வேறு யாரும் இல்லை. எனக்கு அதிகமாக விளையாட வேண்டும் என்று தோன்றினால், நான் விளையாடுவேன். கால்பந்து விளையாட விருப்பமில்லை என்றால், எனது ஓய்வு முடிவை நானே அறிவிப்பேன் . கால நிலையை பொறுத்து எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story