கராச்சி– மும்பை விமான சேவை ரத்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ‘திடீர்’ நடவடிக்கை


கராச்சி– மும்பை விமான சேவை ரத்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ‘திடீர்’ நடவடிக்கை
x
தினத்தந்தி 5 May 2017 10:48 PM GMT (Updated: 2017-05-06T04:18:24+05:30)

பாகிஸ்தான் இண்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் கராச்சியில் இருந்து மும்பைக்கு வாரம்தோறும் வியாழக்கிழமை விமானம் இயக்கப்பட்டு வந்தது.

மும்பை,

பாகிஸ்தான் இண்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் கராச்சியில் இருந்து மும்பைக்கு வாரம்தோறும் வியாழக்கிழமை விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த விமான நிறுவனம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் ‘கராச்சியில் இருந்து மும்பைக்கு வருகிற 11–ந் தேதி முதல் விமானம் இயக்கப்படாது’ என கூறப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமையே கராச்சி– மும்பை விமானம் இயக்கப்படவில்லை. எனவே நேற்று முன்தினம் முதலே விமான சேவை நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் இண்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையே விமான சேவை நிறுத்தப்பட காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.


Next Story