போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 May 2017 10:51 PM GMT (Updated: 2017-05-06T04:21:24+05:30)

கூடுவாஞ்சேரி போலீசாரால் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

வண்டலூர்,

கூடுவாஞ்சேரி போலீசாரால் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் குற்ற வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரி ஒன்றில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது.

வண்டலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகிலன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்களும் தீயை அணைத்தனர். கன்டெய்னர் லாரி அருகே, காய்ந்த மரக்கிளைகள் இருந்ததால், தீப்பொறி ஏற்பட்டு கன்டெய்னர் லாரி தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இந்த கன்டெய்னர் லாரி அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


Next Story