மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், உலகின் தலைசிறந்த மென்பொருள் புரபசனல் விருது பெற்று பாவை கல்லூரி மாணவர் சாதனை


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், உலகின் தலைசிறந்த மென்பொருள் புரபசனல் விருது பெற்று பாவை கல்லூரி மாணவர் சாதனை
x
தினத்தந்தி 6 May 2017 10:45 PM GMT (Updated: 6 May 2017 8:16 PM GMT)

பாவை மைக்ரோசாப்ட் புதுமை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்கீழ் எண்ணற்ற மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலையும், புதுமையான உத்திகளையும் உயர் கணிப்பொறி ஆளுமை திறனுடன் சமர்ப்பித்து வருகின்றனர்.

ராசிபுரம்,

அதன் அடிப்படையில், பாவை என்ஜினீயரிங் கல்லூரி 3–ம் ஆண்டு தொலைத்தொடர்பு பொறியியல் மாணவர் ஏ.கிஷோர் சவுத்ரி 29 ஆய்வுக்கட்டுரைகளும், 3 வலைப்பதிவுகளும், 4 காணொலிகளும் சமர்ப்பித்து பிளாட்டினம் நபராக உள்ளார். இவை அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 100 பேர் பயனடைந்து உள்ளனர். இதனால் இந்த மாணவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலகின் தலைசிறந்த மென்பொருள் புரபசனல் விருதை பெற்றுள்ளார். மேலும், மைக்ரோசாப்ட் மாணவ பார்ட்னராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே கல்லூரி 3–ம் ஆண்டு தொலைத்தொடர்பு பொறியியல் மாணவர் ஜி.வித்யாதரன் 12 ஆய்வுக்கட்டுரைகளும், 3 வலைப்பதிவுகளும், 1 காணொலியும் சமர்ப்பித்து தங்க நபராக உள்ளார். இவை இணையத்தில் வெளியிடப்பட்டு 36 ஆயிரத்து 800 பேர் பயனடைந்து உள்ளனர். 2–ம் ஆண்டு தொலைத்தொடர்பு பொறியியல் மாணவர் ஏ.நவீன் 7 ஆய்வுக்கட்டுரைகளும், 13 வலைப்பதிவுகளும், ஒரு விடை கோருதலும் சமர்ப்பித்து உள்ளார். இவைகளும் இணையத்தில் வெளியிடப்பட்டு 44 ஆயிரத்து 300 பேர் பயன் அடைந்து உள்ளனர்.

மேலும் 3–ம் ஆண்டு தொலைத்தொடர்பு பொறியியல் மாணவர் எம்.பிரபாகரன் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். அதுவும் இணையத்தில் வெளியிடப்பட்டு 1,024 பேர் பயன் அடைந்தனர். 3–ம் ஆண்டு மாணவர் எஸ்.சோம்நாத் ஒரு வலைப்பதிவை சமர்ப்பித்து உள்ளார். இவரது வலைப்பதிவும் இணையத்தில் வெளியிடப்பட்டு 431 பேர் பயன் அடைந்துள்ளனர்.

அகில இந்திய அளவில் சாதனை படைத்த இந்த மாணவர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், பாவை மைக்ரோசாப்ட் இன்னவேசன் மைய துறைத்தலைவர் எஸ்.விஜயராகவன், இயக்குனர்கள் கே.கே.ராமசாமி (நிர்வாகம்), கே.செந்தில் (சேர்க்கை) எஸ்.சீனிவாசன் (வேலைவாய்ப்பு) மற்றும் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.



Next Story