ராமநத்தம் அருகே வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


ராமநத்தம் அருகே வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 12 May 2017 8:14 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன?

திட்டக்குடி,

ராமநத்தம் அருகே உள்ள கொரக்கவாடி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் தண்டாயுதம். விவசாயி. இவருடைய மகள் பாப்பாத்தி(வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் பாப்பாத்தி மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் இருந்த வி‌ஷம் குடித்து பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story