நோயை குணப்படுத்துவதாக கூறி கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த சாமியார் நகராட்சி தலைவி உள்பட 7 பேர் கைது
நோயை குணமாக்குவதாக கூறி கல்லூரி மாணவியை கடத்தி சாமியார் ஒருவர் கற்பழித்தார். இதற்கு உடந்தையாக இருந்த நகராட்சி தலைவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
நோயை குணமாக்குவதாக கூறி கல்லூரி மாணவியை கடத்தி சாமியார் ஒருவர் கற்பழித்தார். இதற்கு உடந்தையாக இருந்த நகராட்சி தலைவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி கற்பழிப்புபால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகாவில் உள்ள குடெட் கிராமத்தில் திரிம்பக்முனி மங்கள்முனி தாஸ் என்ற சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது.
இந்த ஆசிரமத்திற்கு மொகடா பகுதியை சேர்ந்த நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் தனது நோய் தீர வந்து சென்றார். அப்போது சாமியார் மாணவியிடம் நோயை குணமாக்குவதாகவும், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.
இந்தநிலையில், அண்மையில் தன்னை சந்தித்த அந்த மாணவியை சாமியார் குஜராத் மாநிலம் பிலாட் பகுதிக்கு கடத்திச்சென்று ஒரு கட்டிடத்தின் அறையில் அடைத்து வைத்து 5 நாட்களாக கற்பழித்து உள்ளார். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
7 பேர் கைதுஅப்போது சாமியார் அந்த மாணவியிடம் உனது உடலில் பேய் புகுந்து உள்ளது, அதை விரட்டி சரி செய்ய வேண்டுமெனில் இவ்வாறு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இந்தநிலையில், மாணவி சாமியாரிடம் இருந்து தப்பி வந்து மொகடா போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் தன்னை கடத்தி கற்பழித்த சாமியார் மீதும், தன்னை கடத்தி கற்பழிப்பதற்கு சாமியாருக்கு உடந்தையாக இருந்த சிவசேனாவை சேர்ந்த மொகடா நகராட்சி தலைவி மங்கலா சவுத்ரி, அவரது கணவர் பாண்டுரங், மகன் சந்திப் உள்ளிட்டோர் மீதும் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கலா சவுத்ரி, அவரது கணவர், மகன் உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சாமியார் உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.