தாராவியில், விளையாட்டின் போது கிரிக்கெட் மட்டையால் தாக்கி சிறுவன் கொலை


தாராவியில், விளையாட்டின் போது கிரிக்கெட் மட்டையால் தாக்கி சிறுவன் கொலை
x
தினத்தந்தி 14 May 2017 4:21 AM IST (Updated: 14 May 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி சிறுவன் கொலை செய்யப்பட்டான்.

மும்பை,

தாராவியில் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி சிறுவன் கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

விளையாட்டில் தகராறு

மும்பை தாராவி 90 அடி சாலை பிரதாப்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் அமீர் ஹூசேன் (வயது16). அங்குள்ள காந்தி மைதானத்தில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அமீர் ஹூசேனுக்கும், மற்ற சிறுவர்களுக்கும் கிடையே திடீரென தகராறு உண்டானது.

இதில் அமீர் ஹூசேனுக்கு ஆதரவாக இரண்டு சிறுவர்கள் பேசினார்கள். அப்போது எதிர் தரப்பை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் மட்டையால் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

சிறுவன் பலி

இதில் வேதனை தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேனாஸ் அன்சாரி (32) என்ற பெண் ஓடி வந்து சிறுவர்களை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் அடி விழுந்தது. இதையடுத்து அந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த பெண் உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சயான் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமீர் ஹூசேன் பரிதாபமாக இறந்து போனான். தகவல் அறிந்து வந்த தாராவி போலீசார் அவனது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story