ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடி பறிமுதல் 10 பேர் கைது


ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடி பறிமுதல் 10 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2017 4:45 AM IST (Updated: 16 May 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், கமிஷன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.3¼ கோடி மதிப்புள்ள ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூரு பசவனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகணபதி கோவில் அருகே நிற்கும் மர்மநபர்கள் ரத்து செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிப்பதாக நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு பசவனகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, காரில் நின்ற சில மர்மநபர்கள் போலீசாரை பார்த்தவுடன் ஓடிவிட்டனர். 10 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

இவர்களிடம் விசாரித்தபோது கமிஷன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் மாற்ற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர்கள் சீனிவாஸ் (வயது 43), மகேஷ் (32), கருணாகரன் (48), அப்துல் முஜீப் (40), நீலகண்டா (32), ஜம்பனகவுடா (62), நாராயணா (48), உதய் குமார் (34), கார்த்திக் (32), ருத்ரகுமார் (47) என்பது தெரியவந்தது.

ரூ.3¼ கோடி பறிமுதல்

இவர்களிடம் இருந்து ரூ.3¼ கோடி மதிப்புள்ள ரத்து செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய பிரசாத், சசி, ராஜேந்திரா ஆகிய 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகளை சரணப்பா பார்வையிட்டார்.


Next Story