பொதுமக்களை பாதிப்படைய செய்யும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்


பொதுமக்களை பாதிப்படைய செய்யும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:00 AM IST (Updated: 1 Jun 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை பாதிப்படைய செய்யும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நெய்க்காரபட்டி

பொதுமக்களை பாதிப்படைய செய்யும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வயலூரில் நடந்த த.மா.கா. நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில், அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை–எளிய மக்களுக்கு நியாயமான விலையில் மருந்து கிடைக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, குடியிருப்பு மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள மதுபான கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், மக்களுக்கு சேவை செய்யவும் கடந்த 4 மாதமாக வட்டார, நகர, மாநில நிர்வாகிகளை சந்தித்து வியூகம் அமைத்து வருகிறோம்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலை அரசு முறையாக நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மாநில பிரச்சினைகள், எல்லையில் பதற்றம் ஆகியவற்றை மறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story