சிவமொக்கா தாலுகாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 6 கல்குவாரிகளுக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் அதிரடி நடவடிக்கை


சிவமொக்கா தாலுகாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 6 கல்குவாரிகளுக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 31 May 2017 7:03 PM GMT (Updated: 31 May 2017 7:03 PM GMT)

சிவமொக்கா தாலுகாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 6 கல்குவாரிகளுக்கு ‘சீல்‘ வைத்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவமொக்கா,

சிவமொக்கா தாலுகாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 6 கல்குவாரிகளுக்கு ‘சீல்‘ வைத்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மணல் கொள்ளை...

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆற்று மணலை சிலர் சட்டவிரோதமாக திருடி விற்பதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினேவ்கெரே மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சிவமொக்கா மாவட்டத்தில் சிகாரிபுரா, சொரப், தீர்த்தஹள்ளி, சாகர், பத்ராவதி, சிவமொக்கா, ஒசநகர் ஆகிய 7 தாலுக்காக்களில் உள்ள போலீஸ் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பலர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர். மேலும் மணலை எடுத்து செல்ல பயன்படுத்திய லாரிகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

6 கல்குவாரிகளுக்கு ‘சீல்‘ வைப்பு

இந்த நிலையில் சிவமொக்கா தாலுகாவில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்ந் புகாரை தொடர்ந்து சிவமொக்கா தாலுகா பசவனகங்கூர், கல்லுகங்கூர், அப்பலகெரே பகுதிகளில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டா லோகேஷ் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 6 கல்குவாரிகளை ‘சீல்‘ வைத்து கலெக்டர் லோகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அங்கு கற்களை வெட்ட பயன்படுத்திய எந்திரங்கள், லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் அரசு அனுமதி வழங்கிய அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்த கல்குவாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினேவ்கெரே, தாசில்தார் கேசவமூர்த்தி, கனிமவளத்துறை அதிகாரி ரஷ்மி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story