மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:15 AM IST (Updated: 1 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அக்பர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெய்தீன் வரவேற்றார். இதில் நகர தலைவர் அன்சாரி, மாவட்ட செயலாளர் சாதிக், நாகை நகர தலைவர் ஷேக்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், மத்திய அரசு திருத்தம் செய்துள்ள மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story