கலவர வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு
கலவர வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஜல்னா,
கலவர வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கலவரம்ஜல்னா மாவட்டம் செவேலி கிராமத்தில் கடந்த 2008–ம் ஆண்டு ஏப்ரல் 3–ந் தேதி ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 30–க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஜல்னா செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி கோசம்கர் சமீபத்தில் தீர்ப்பு கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
ஜெயில் தண்டனைஇதில், ஷேக் காஜா குரேஷி (வயது 31) என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 17 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரத்து 770 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
குற்றச்சாட்டு நிரூபணம் ஆகாததால் 10 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 32 பேர் சாட்சியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.