ரெயில்வே போலீசில் கமாண்டோ படை பிரிவு
தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ள வசதியாக ரெயில்வே போலீசில் கமாண்டோ படை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ள வசதியாக ரெயில்வே போலீசில் கமாண்டோ படை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
கமாண்டோ படை பரிவினர்மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மும்பையில் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ரெயில்வே போலீசில் கமாண்டோ படைப்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. கமோண்டோ படை வீரர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து 11 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக மும்பையில் உள்ள 17 ரெயில் நிலையங்களில் 25 கமாண்டோ படை பரிவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஏ.கே.47, 100 குண்டுகள்..இதுகுறித்து ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது:–
கூட்ட நெரிசல் மிகுந்த ரெயில் நிலையங்களில் 6 கமாண்டோ வீரரை பணியில் அமர்த்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கும். படிப்படியாக இது நிறைவேற்றப்படும். கமோண்டோ வீரருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி, 100 குண்டுகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். இவர்களுக்கு சம்பவ இடத்திற்கு கூடுதல் படை வரும்வரை தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.