தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது


தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2017 3:30 AM IST (Updated: 5 Jun 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது இறைச்சி பறிமுதல்

கொடைக்கானல்,

தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வனவிலங்குகள் வேட்டை

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, மான், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீபகாலமாக மர்மநபர்கள் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கொடைக்கானல் கோட்டம் தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வனஅலுவலர் முருகன் உத்தரவின் பேரில் வனச்சரகர் கருப்பையா தலைமையில் அதிகாரிகள் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

3 பேர் கைது

அப்போது காவல் குடிசை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காட்டுப்பன்றி இறைச்சி துண்டுகளாக வெட்டி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அவர்கள், பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்ற ராஜ்குமார் (வயது 25) கவுதம் (19) சிவா (25) என்பதும், வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை துண்டுகளாக வெட்டி பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story