இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து ‘பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுவோம்'


இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து ‘பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுவோம்
x
தினத்தந்தி 8 Jun 2017 4:00 AM IST (Updated: 8 Jun 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததை கண்டித்து ‘பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் பேட்டி

திண்டுக்கல்,

ஆதித்தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பறை முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ தடை விதித்ததை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மே–17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி மற்றும் டைசன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் மாநில தலைவர் ஜக்கையன் நிருபர்களிடம் கூறும்போது, இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ தடை விதித்ததை மத்திய அரசு திரும்ப பெறவில்லை எனில், வருகிற 13–ந்தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.


Next Story