இறைச்சிக்கு மாடுகள் விற்க தடைவிதித்ததை கண்டித்து பல்வேறு கட்சியினர் உண்ணாவிரதம்


இறைச்சிக்கு மாடுகள் விற்க தடைவிதித்ததை கண்டித்து பல்வேறு கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:30 AM IST (Updated: 11 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்கு மாடுகள் விற்க தடைவிதித்ததை கண்டித்து புஞ்சை புளியம்பட்டியில் பல்வேறு கட்சியினர் உண்ணாவிரதம்

புஞ்சைபுளியம்பட்டி

இறைச்சிக்கு மாடுகள் விற்க தடைவிதித்ததை கண்டித்து புஞ்சைபுளியம்பட்டியில் பல்வேறு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

நாடுமுழுவதும் இறைச்சிக்கு மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இறைச்சிக்கு மாடுகள் விற்பதற்கு தடைவிதித்ததை கண்டித்து புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலையம் முன்பு பல்வேறு கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

மத்திய அரசுக்கு கண்டிப்பு

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.சுப்பிரமணியம், நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் கனகராஜ், வட்டார தலைவர் முத்துசாமி, இந்தியகம்யூனிஸ்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தங்கவேல், நகர செயலாளர் தாமோதிரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருதணிகாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தைவள்ளுவன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் சுலைமான், புரட்சிகர இளைஞர் பேரவை தமிழ்ராசு மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள்.

300–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள். முடிவில் காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எல்.முத்துக்குமார் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


Next Story