கொலபாவில் ரூ.36 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது


கொலபாவில் ரூ.36 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2017 8:51 PM GMT (Updated: 12 Jun 2017 8:51 PM GMT)

கொலபாவில் ரூ.36 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டலில் தங்கியிருந்த போது சிக்கினார்.

மும்பை,

கொலபாவில் ரூ.36 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டலில் தங்கியிருந்த போது சிக்கினார்.

போதைப்பொருள்

மும்பை கொலபாவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சம்பவத்தன்று வெளிநாட்டுக்காரர் ஒருவர் அதிகளவு போதைப்பொருளுடன் தங்கி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று வெளிநாட்டுக்காரர் தங்கியிருந்த அறையில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் அந்த அறையில் 12 பாக்கெட்டுகளில் ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 6 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

வெளிநாட்டுக்காரர் கைது

அதன் மதிப்பு ரூ.36 கோடி ஆகும். இதையடுத்து அந்த வெளிநாட்டுக்காரரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர், கொலம்பியா நாட்டை சேர்ந்த பிரிடி ரெண்டீரியா(வயது32) என்பது தெரியவந்தது. அவர் இதற்கு முன் இரண்டு முறை மும்பைக்கு போதைப்பொருளை கடத்தி வந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக ஓட்டலில் தங்கியிருந்தார் என்பதை கண்டறிய அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பொலிவியாவை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story