ரெயில் தண்டவாளம் அருகே முட்புதர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் கடும் புகை மூட்டம்
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதர்களுக்கு யாரோ மர்மநபர்கள் தீ வைத்து விட்டனர்.
திருவள்ளூர்,
தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் ரெயில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் எழுந்தது. அந்த வழியாக சென்ற ரெயிலில் பயணம் செய்த பயணிகள், மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். இதனால் அந்த வழியாக சிறிது நேரம் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரெயில்வே அதிகாரிகள், தீப்பற்றி எரிந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முட்புதரில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அந்த பகுதியில் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ரெயில் பயணிகள் சிறிது நேரம் அவதிக்கு உள்ளானார்கள்.
Related Tags :
Next Story