மோட்டார் சைக்கிளில் வந்து மோதியவரை தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 2


மோட்டார் சைக்கிளில் வந்து மோதியவரை தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 2
x
தினத்தந்தி 14 Jun 2017 3:45 AM IST (Updated: 14 Jun 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வந்து மோதியவரை தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சூர்யா (வயது 38). நேற்று முன்தினம் சூர்யா தனது வீட்டு வாசல் முன்பு தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தாமு என்கிற தாமோதரன் (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அமர்ந்து இருந்த சூர்யா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சரவணன் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று தட்டிக்கேட்டார்.கைது

இதில் ஆத்திரம் அடைந்த தாமோதரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான ராமகிருஷ்ணன், அசோக் ஆகியோர் சரவணனை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சூர்யா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணன், அசோக் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story