கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:00 AM IST (Updated: 14 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். கட்டிட, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை பாதுகாத்திட சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை வாபஸ் பெற வேண்டும். தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மணல் வினியோகத்தை அரசே ஏற்று நடத்தி, நிர்ணயித்த விலையில் வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளி எங்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாலும் ரூ.5 லட்சம் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். நலவாரிய கமிட்டியில் சி.ஐ.டி.யு.க்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story