மணப்பாறை அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 மாணவர்கள் படுகாயம்
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் கவியரசன்(வயது 12), மாயகிருஷ்ணன்(13), சண்முகபிரியன் (11). இவர்கள் 3 பேரும் பிச்சம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் கவியரசன்(வயது 12), மாயகிருஷ்ணன்(13), சண்முகபிரியன் (11). இவர்கள் 3 பேரும் பிச்சம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற அவர்கள் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். மணப்பாறை– துவரங்குறிச்சி சாலையில் பிள்ளையார்கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மணப்பாறையில் இருந்து புத்தாநத்தம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மாணவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் சண்முகபிரியன் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.