ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 29 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்


ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 29 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2017 5:44 AM IST (Updated: 15 Jun 2017 5:43 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் நேற்று தி.மு.க. சார்பில் 29 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் நேற்று தி.மு.க. சார்பில் 29 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 11 பெண்கள் உள்பட 726 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அந்த கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கோட்டை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி தலைமையில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த வேலூர் வடக்கு மற்றும் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

726 கைது

இதேபோல் அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் உள்பட 29 இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 11 பெண்கள் உள்பட 726 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.



Next Story