கம்ப்யூட்டர் மைய அதிபர் கொலையில் வேலூரை சேர்ந்த 2 பேர் சரண்
கம்ப்யூட்டர் மைய அதிபர் கொலையில் வேலூரை சேர்ந்த 2 பேர் சரண் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
ஆரணி
தெள்ளாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலூரை சேர்ந்த 2 பேர் ஆரணி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கம்ப்யூட்டர் மையம்திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தெள்ளாரில் பழனிமுருகன் (வயது 35) என்பவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பிரம்மதேசம் ஆகும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவர் சொந்த ஊர் சென்றபோது அங்கு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கூலிப்படையினர் இவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் இந்த கொலை தொடர்பாக போளூர் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த ராஜா (32), சத்துவாச்சாரியை சேர்ந்த பாபு மகன் அரிபாபு(22) ஆகியோர் ஆரணியில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி எழில்வேலன் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரையும் போலீசார் வேலூருக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடிகளான இவர்கள் மீது காட்பாடி, வேலூர் போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
போலீஸ் காவல்எதற்காக இவர்கள் பழனிமுருகனை கொலை செய்தார்கள் என்பது இவர்களை போலீஸ்காவலில் எடுத்து விசாரித்த பின்னரே தெரிய வரும். இதனால் பிரம்மதேசம் போலீசார் இவர்களை போலீஸ் காவலில் எடுக்க கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.